-
மாற்கு 12:18-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்கள்+ அவரிடம் வந்து,+ 19 “போதகரே, ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்திருக்கிறார்.+ 20 எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். 21 இரண்டாவது சகோதரன் அவளைத் திருமணம் செய்து அவனும் வாரிசு இல்லாமல் இறந்துபோனான். மூன்றாவது சகோதரனும் அதேபோல் செய்து இறந்துபோனான். 22 அந்த ஏழு பேரும் வாரிசு இல்லாமல் இறந்துபோனார்கள்; கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 23 அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? அந்த ஏழு பேருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள்.
-
-
லூக்கா 20:27-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்களில்+ சிலர் அப்போது அவரிடம் வந்து,+ 28 “போதகரே, ‘திருமணமான ஒருவன் பிள்ளை இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே எழுதி வைத்திருக்கிறார்.+ 29 எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளை இல்லாமல் இறந்துபோனான். 30 இரண்டாவது சகோதரனும் மூன்றாவது சகோதரனும் அவளைத் திருமணம் செய்து, பின்பு இறந்துபோனார்கள். 31 அப்படியே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து பிள்ளை இல்லாமல் இறந்துபோனார்கள். 32 கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 33 அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அந்த ஏழு பேருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள்.
-