8 ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார்.
18 ஆனாலும், அவர்கள் கேட்காமலா இருந்தார்கள்? சொல்லப்போனால், “அவர்களுடைய சத்தம் பூமியெங்கும் எட்டுகிறது; அவர்களுடைய செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.”+
13 மற்ற தேசத்து மக்களாகிய உங்களிடம் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மற்ற தேசத்து மக்களுக்கு நான் ஓர் அப்போஸ்தலனாக+ இருப்பதால் என் ஊழியத்தை மகிமைப்படுத்துகிறேன்.+
6 பின்பு, இன்னொரு தேவதூதர் நடுவானத்தில்* பறப்பதைப் பார்த்தேன்; பூமியில் குடியிருக்கிற எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை அவர் அறிவித்துக்கொண்டிருந்தார்.+