-
மாற்கு 1:40-45பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
40 தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து மண்டிபோட்டு, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொல்லிக் கெஞ்சினான். 41 அப்போது, அவர் மனம் உருகி, தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். 42 உடனே தொழுநோய் மறைந்து, அவன் சுத்தமானான். 43 அதன் பின்பு அவனுக்குக் கண்டிப்புடன் கட்டளைகள் கொடுத்து, 44 “இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதே, ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கைகளைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி உடனடியாக அவனை அனுப்பினார். 45 ஆனால், அந்த மனிதன் அங்கிருந்து புறப்பட்டுப் போய், அந்த விஷயத்தை எல்லாருக்கும் பரப்ப ஆரம்பித்தான்; அதனால் இயேசு எந்த நகரத்துக்குள்ளும் வெளிப்படையாகப் போக முடியவில்லை, ஒதுக்குப்புறமான இடங்களிலேயே தங்கியிருந்தார். அப்படியிருந்தும், அவரைப் பார்க்க எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.+
-