-
மத்தேயு 13:18-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 இப்போது, விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்.+ 19 பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை; பொல்லாதவன்+ வந்து அவருடைய இதயத்தில் விதைக்கப்பட்டதைக் கொத்திக்கொண்டு போய்விடுகிறான்.+ 20 பாறை நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்டு, அதை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ 21 ஆனால், அது அவருக்குள் வேர்விடுவதில்லை; அதனால், அவர் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார். 22 முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இந்த உலகத்தின்* கவலையும்+ செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அது பலன் கொடுப்பதில்லை.+ 23 நல்ல நிலத்தைப் போல் இருப்பவரோ அந்தச் செய்தியைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பலன் தருகிறார்; அவர் 100 மடங்காகவும், இன்னொருவர் 60 மடங்காகவும், வேறொருவர் 30 மடங்காகவும் பலன் தருகிறார்கள்”+ என்று சொன்னார்.
-
-
மாற்கு 4:14-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 விதைக்கிறவன் கடவுளுடைய செய்தியை விதைக்கிறான்.+ 15 பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்; ஆனால், அவர்களுக்குள் விதைக்கப்பட்ட அந்தச் செய்தியைச் சாத்தான் வந்து+ உடனடியாக எடுத்துவிடுகிறான்.+ 16 பாறை நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டதும் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.+ 17 ஆனால், அவர்களுக்குள் அது வேர்விடுவதில்லை; அதனால், அவர்கள் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார்கள். 18 முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்.+ 19 ஆனால், இந்த உலகத்தின்* கவலைகளும்,+ செல்வத்தின் வஞ்சக சக்தியும்,+ மற்ற ஆசைகளும்+ இதயத்துக்குள் புகுந்து அந்தச் செய்தியை நெருக்கிப் போடுகின்றன, அதனால் அது பலன் கொடுக்காமல் போகிறது. 20 நல்ல நிலத்தைப் போல் இருப்பவர்களோ அந்தச் செய்தியைக் காதுகொடுத்துக் கேட்டு, அதை மனதார ஏற்றுக்கொண்டு, 30 மடங்காகவும் 60 மடங்காகவும் 100 மடங்காகவும் பலன் கொடுக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
-