-
ஆதியாகமம் 49:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 யூதா ஒரு சிங்கக்குட்டி!+ என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+
-