சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; செமினீத்* இசையில்; தாவீதின் சங்கீதம்.
12 யெகோவாவே, என்னைக் காப்பாற்றுங்கள். ஏனென்றால், உண்மையுள்ளவர்கள்* யாருமே இப்போது இல்லை.
விசுவாசமானவர்கள் இந்த உலகத்திலிருந்து மறைந்துவிட்டார்கள்.
2 எல்லாரும் பொய் பேசுகிறார்கள்.
தங்கள் உதடுகளால் போலியாகப் புகழ்கிறார்கள், வஞ்சக உள்ளத்தோடு பேசுகிறார்கள்.+
3 போலியாகப் புகழ்கிற உதடுகளை யெகோவா வெட்டிப்போடுவார்.
பெருமையடிக்கிற நாவை அறுத்தெறிவார்.+
4 “நாங்கள் பேசியே ஜெயித்துவிடுவோம்.
எங்கள் இஷ்டத்துக்குப் பேசுவோம்.
எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது!”+ என்று அவர்கள் சொல்கிறார்கள்.
5 “கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,
ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,+
நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன்.
அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
6 யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.+
அவை களிமண் சூளையில்* ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன.