-
ஆதியாகமம் 28:13, 14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+ 14 உன்னுடைய சந்ததி நிச்சயம் பூமியின் மணலைப் போலப் பெருகும்.+ உன்னுடைய வம்சம் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் பரவும். உன் மூலமாகவும் உன் சந்ததி மூலமாகவும் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் நிச்சயமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்.+
-