15 பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “நீ உன் மனைவியை இனி சாராய்+ என்று கூப்பிடக் கூடாது, இனிமேல் அவளுடைய பெயர் சாராள். 16 நான் அவளை ஆசீர்வதித்து, அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன்.+ நான் அவளை ஆசீர்வதிக்கப்போவதால், அவளிடமிருந்து தேசங்கள் உருவாகும், ராஜாக்கள் தோன்றுவார்கள்” என்று சொன்னார்.