-
எண்ணாகமம் 35:22-25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ஆனால், முன்விரோதம் இல்லாமல் எதேச்சையாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அல்லது எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் ஒருவன்மேல் எதையாவது வீசியதால்+ 23 அல்லது ஒருவன் இருப்பது தெரியாமல் அவன்மேல் ஒரு கல்லைப் போட்டதால் அல்லது அவனை எதிரியாகப் பார்க்காமலும் அவனுக்குக் கெடுதல் நினைக்காமலும் தெரியாத்தனமாகக் கல்லைப் போட்டதால் அவன் இறந்துபோனால், 24 அவனைக் கொலை செய்தவனுக்கும் பழிவாங்குபவனுக்கும் ஜனங்களின் பிரதிநிதிகள் இந்த நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.+ 25 இப்படி, பழிவாங்குபவனின் கையிலிருந்து கொலைகாரனை ஜனங்களின் பிரதிநிதிகள் காப்பாற்ற வேண்டும். அவன் தப்பியோடிய அடைக்கல நகரத்துக்கே அவனைத் திருப்பி அனுப்ப வேண்டும். பரிசுத்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட தலைமைக் குரு+ சாகும்வரை அவன் அங்கேயே இருக்க வேண்டும்.
-
-
உபாகமம் 19:3-5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரியாத்தனமாகக் கொலை செய்த ஒருவன் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்காகச் சாலைகளை அமைக்க வேண்டும்.
4 அங்கே ஓடிப்போகிறவனின் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: முன்விரோதம் இல்லாமல் அவன் இன்னொருவனை எதேச்சையாகத் தாக்கிக் கொன்றுவிட்டால்,+ 5 இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, விறகு பொறுக்குவதற்காக அவன் இன்னொருவனோடு காட்டுக்குப் போயிருக்கலாம். அங்கே மரத்தை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியை ஓங்கும்போது, அதன் கைப்பிடியிலிருந்து அது கழன்று, அவனோடு வந்தவன்மேல் விழுந்திருக்கலாம். அதனால், அவன் இறந்திருக்கலாம். அப்போது, தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும்.+
-
-
யோசுவா 20:7-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். நப்தலி மலைப்பகுதியில் உள்ள கலிலேயாவைச் சேர்ந்த கேதேஸ்,+ எப்பிராயீம் மலைப்பகுதியில் உள்ள சீகேம்,+ யூதா மலைப்பகுதியில் உள்ள கீரியாத்-அர்பா,+ அதாவது எப்ரோன், ஆகிய நகரங்களைத் தனியாக* பிரித்து வைத்தார்கள். 8 எரிகோவுக்குக் கிழக்கிலே, ரூபன் கோத்திரத்துக்குச் சொந்தமான பீடபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசர்,+ காத் கோத்திரத்துக்குச் சொந்தமான கீலேயாத்திலுள்ள ராமோத்,+ மனாசே கோத்திரத்துக்குச் சொந்தமான பாசானிலுள்ள கோலான்+ ஆகிய நகரங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.+
9 அந்த நகரங்கள் அடைக்கல நகரங்களாகப் பிரித்து வைக்கப்பட்டன. தெரியாத்தனமாகக் கொலை செய்துவிடுகிற இஸ்ரவேலனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ தப்பியோடுவதற்காகவும்,+ ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படுவதற்கு முன்பே பழிவாங்குபவனால் கொல்லப்படாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.+
-