5 நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்தினால்,+ அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதைச் செலுத்த வேண்டும்.+ 6 பலி செலுத்தும் நாளில் அதைச் சாப்பிட வேண்டும், அடுத்த நாளிலும் அதைச் சாப்பிடலாம். ஆனால், மூன்றாம் நாள்வரை மீதியாக இருப்பதை எரித்துவிட வேண்டும்.+