-
2 நாளாகமம் 17:8, 9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 லேவியர்களான செமாயா, நெத்தனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யெகோனத்தான், அதோனியா, தொபையா, தோபத்தோனியா ஆகியோரும் குருமார்களான எலிஷாமாவும் யோராமும் அவர்களுடன் போனார்கள்.+ 9 யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள்.
-
-
நெகேமியா 8:7, 8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதன்பின் யெசுவா, பானி, செரெபியா,+ யாமின், அக்கூப், சபெதாய், ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபத்,+ ஆனான், பெலாயா ஆகிய லேவியர்கள் திருச்சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள்.+ ஜனங்களும் நின்றுகொண்டே அதைக் கேட்டார்கள். 8 இப்படி, எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.*+
-