-
லேவியராகமம் 3:3-5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
-
-
லேவியராகமம் 7:29-31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்துகிறவன் அதில் ஒரு பங்கை யெகோவாவுக்கென்று கொண்டுவர வேண்டும்.+ 30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 31 குருவானவர் அதன் கொழுப்பைப் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ ஆனால், மார்க்கண்டம் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சொந்தமாகும்.+
-