-
உபாகமம் 13:6-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 உங்கள் மகனோ, மகளோ, கூடப் பிறந்த சகோதரனோ, ஆசை மனைவியோ, ஆருயிர் நண்பனோ ரகசியமாக உங்களிடம் வந்து, வேறு தெய்வங்களை வணங்கலாம் என்று சொல்லி ஆசைகாட்டலாம்.+ அந்தத் தெய்வங்கள் உங்களுக்கோ உங்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களாக இருக்கலாம். 7 தேசத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற ஜனங்களுடைய, அதாவது உங்களுக்குப் பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற ஜனங்களுடைய, தெய்வங்களாக அவை இருக்கலாம். 8 அந்த நபர் சொல்வதை நீங்கள் கேட்கவும் கூடாது, அதன்படி செய்யவும் கூடாது.+ அவர்மேல் இரக்கமோ கரிசனையோ காட்டக் கூடாது. அவரை ஒளித்துவைக்கவும் கூடாது. 9 கண்டிப்பாக அவரைக் கொன்றுபோட வேண்டும்.+ முதலில் நீங்கள்தான் அவர்மேல் கல்லெறிய வேண்டும், பின்பு மற்ற எல்லா ஜனங்களும் கல்லெறிய வேண்டும்.+
-