-
லேவியராகமம் 22:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொழுநோய்+ இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய்+ இருந்தால் அந்தத் தீட்டு நீங்கும்வரை+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. அதேபோல், பிணத்தைத் தொட்ட ஒருவனைத் தொட்டுத் தீட்டுப்பட்டவனும்,+ விந்து வெளிப்பட்ட ஒருவனும்,+ 5 அசுத்தமான சிறு பிராணியைத் தொட்டவனும்,+ ஏதோவொரு காரணத்தால் தீட்டாகிவிட்ட ஒருவனைத் தொட்டவனும்+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 6 இப்படிப்பட்ட ஒருவனையோ ஒன்றையோ தொட்டவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். பரிசுத்த பொருள்களில் எதையும் அவன் சாப்பிடக் கூடாது. அவன் குளிக்க வேண்டும்.+
-