-
எபிரெயர் 9:9, 10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+ 10 அவை வெறுமனே உணவுகளோடும் பானங்களோடும் பலவிதமான தூய்மைச் சடங்குகளோடும்தான்*+ சம்பந்தப்பட்டிருக்கின்றன; உடல் சம்பந்தப்பட்ட சட்டங்களாகத்தான் இருக்கின்றன;+ எல்லாவற்றையும் சரிப்படுத்துவதற்கான காலம் வரும்வரை மட்டுமே அவை நீடித்திருக்கும்.
-
-
எபிரெயர் 9:13, 14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 வெள்ளாடுகளின் இரத்தமும் காளைகளின் இரத்தமும்+ தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்படுகிற இளம் பசுவின் சாம்பலுமே அவர்களுடைய உடலைத் தூய்மையாக்குகிறது+ என்றால், 14 கிறிஸ்துவின் இரத்தம்+ நம்முடைய மனசாட்சியை இன்னும் எந்தளவு தூய்மையாக்கும்! செத்த செயல்களைவிட்டு மனம் திருந்தி உயிருள்ள கடவுளுக்கு நாம் பரிசுத்த சேவை செய்வதற்காக+ அதை எந்தளவு தூய்மையாக்கும்!+ கடவுளுடைய நிரந்தரச் சக்தியின் மூலம் கிறிஸ்து தன்னையே குறையில்லாத பலியாக அவருக்கு அர்ப்பணித்தார்.
-