-
எண்ணாகமம் 35:22-24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ஆனால், முன்விரோதம் இல்லாமல் எதேச்சையாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அல்லது எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் ஒருவன்மேல் எதையாவது வீசியதால்+ 23 அல்லது ஒருவன் இருப்பது தெரியாமல் அவன்மேல் ஒரு கல்லைப் போட்டதால் அல்லது அவனை எதிரியாகப் பார்க்காமலும் அவனுக்குக் கெடுதல் நினைக்காமலும் தெரியாத்தனமாகக் கல்லைப் போட்டதால் அவன் இறந்துபோனால், 24 அவனைக் கொலை செய்தவனுக்கும் பழிவாங்குபவனுக்கும் ஜனங்களின் பிரதிநிதிகள் இந்த நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.+
-
-
உபாகமம் 19:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அங்கே ஓடிப்போகிறவனின் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: முன்விரோதம் இல்லாமல் அவன் இன்னொருவனை எதேச்சையாகத் தாக்கிக் கொன்றுவிட்டால்,+ 5 இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, விறகு பொறுக்குவதற்காக அவன் இன்னொருவனோடு காட்டுக்குப் போயிருக்கலாம். அங்கே மரத்தை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியை ஓங்கும்போது, அதன் கைப்பிடியிலிருந்து அது கழன்று, அவனோடு வந்தவன்மேல் விழுந்திருக்கலாம். அதனால், அவன் இறந்திருக்கலாம். அப்போது, தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும்.+ 6 ஒருவேளை அந்த நகரம் ரொம்பத் தூரத்தில் இருந்தால், பழிவாங்குபவன்*+ அந்தக் கொலையாளியை விரட்டிப்பிடித்து ஆவேசத்தில் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எந்தவித முன்விரோதமும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததால், நியாயப்படி அவன் சாக வேண்டியதில்லை.+
-