4 ஆனால் ஏகூத் இறந்த பின்பு, மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+ 2 அதனால் யெகோவா, கானானின் ராஜாவாகிய யாபீனின் கையில் இஸ்ரவேலர்களைக் கொடுத்துவிட்டார்.+ அவன் ஆத்சோரில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய படைத் தளபதியின் பெயர் சிசெரா, இவன் அரோசேத்-கோயிமில்+ வாழ்ந்துவந்தான்.