-
நியாயாதிபதிகள் 9:16-18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அபிமெலேக்கை ராஜாவாக்கியதால்+ நீங்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டதாக நினைக்கிறீர்களோ? யெருபாகாலுக்கும் அவருடைய வீட்டாருக்கும் நல்லது செய்துவிட்டதாகவும், அவருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்துவிட்டதாகவும் நினைக்கிறீர்களோ? 17 என்னுடைய அப்பா உங்களுக்காகப் போர் செய்தபோது,+ மீதியானியர்களின் கையிலிருந்து உங்களைக் காப்பாற்ற தன்னுடைய உயிரையே பணயம் வைத்தார்.+ 18 ஆனால், இன்று நீங்கள் என்னுடைய அப்பாவின் குடும்பத்தாருக்கு விரோதமாக வந்து அவருடைய 70 மகன்களை ஒரே கல்லின் மேல் கொன்றுபோட்டீர்கள்.+ அவருடைய அடிமைப் பெண்ணின் மகனாகிய அபிமெலேக்கு+ உங்கள் சகோதரனாக இருப்பதால் அவனை சீகேமின் தலைவர்களான உங்களுக்கு ராஜாவாக்கினீர்கள்.
-