-
நியாயாதிபதிகள் 2:20-23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 கடைசியில், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது.+ அதனால் அவர், “இந்த ஜனங்கள் அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த ஒப்பந்தத்தை+ மீறி, எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ 21 அதனால், யோசுவா சாகும்போது விட்டுவைத்திருந்த ஒரு தேசத்தாரைக்கூட+ அவர்கள் முன்னாலிருந்து நான் துரத்த மாட்டேன். 22 இஸ்ரவேலர்கள் அவர்களுடைய முன்னோர்களைப் போல யெகோவாவின் வழியில் நடக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்காக+ அப்படிச் செய்வேன்” என்று சொன்னார். 23 அதன்படியே, யெகோவா மற்ற தேசத்து ஜனங்களை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டார். அவர்களை உடனடியாகத் துரத்தியடிக்கவும் இல்லை, யோசுவாவின் கையில் கொடுக்கவும் இல்லை.
-