-
நியாயாதிபதிகள் 3:9, 10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார். 10 யெகோவாவின் சக்தி அவருக்குக் கிடைத்தது,+ அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக ஆனார். அவர் போருக்குப் போனபோது, மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமைத் தோற்கடிக்க யெகோவா அவருக்கு உதவினார்.
-
-
நியாயாதிபதிகள் 14:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை.
-
-
1 சாமுவேல் 10:10, 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 சவுலும் அவருடைய வேலைக்காரனும் அந்த மலைக்குப் போனபோது, தீர்க்கதரிசிகள் அவரைச் சந்தித்தார்கள். உடனே, அவருக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது.+ அவர்களுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்.+ 11 அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்தவர்கள், தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தார்கள். அப்போது, “கீசின் மகன் சவுலுக்கு என்ன ஆனது? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
-