-
யோசுவா 13:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 மீதி இருக்கும் அந்தப் பகுதிகள்+ இவைதான்: பெலிஸ்தியர்களுக்கும் கேசூரியர்களுக்கும் சொந்தமான பிரதேசங்கள்+ 3 (அதாவது, எகிப்துக்குக் கிழக்கே உள்ள நைல் நதியின் கிளை நதியிலிருந்து* வடக்கே எக்ரோனியர்களின் எல்லை வரையுள்ள பிரதேசங்கள்; இது முன்பு கானானியர்களின் பகுதியாகக்+ கருதப்பட்டது); பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள் ஆட்சி செய்த காசா, அஸ்தோத்,+ அஸ்கலோன்,+ காத்,+ எக்ரோன்+ ஆகிய ஊர்கள்; தெற்கே உள்ள ஆவீமியர்களின்+ பிரதேசம்;
-
-
1 சாமுவேல் 9:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 “பென்யமீன் பிரதேசத்தைச்+ சேர்ந்த ஒருவனை நாளைக்கு இதே நேரத்தில் உன்னிடம் அனுப்புவேன். என்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நீ அவனைத் தலைவனாக அபிஷேகம் செய்ய வேண்டும்.+ பெலிஸ்தியர்களிடமிருந்து அவன் என் ஜனங்களைக் காப்பாற்றுவான். என் ஜனங்கள் படுகிற கஷ்டங்களைப் பார்த்தேன், அவர்களுடைய கதறல் சத்தம் என் சன்னிதியை எட்டியது”+ என்று சொல்லியிருந்தார்.
-