27 தாவீது தன்னுடைய ஆட்களோடு போய் 200 பெலிஸ்தியர்களை வெட்டிச் சாய்த்தார். ராஜாவின் மாப்பிள்ளை ஆவதற்காக அந்த 200 பெலிஸ்தியர்களின் நுனித்தோல்களையும் கொண்டுவந்து கொடுத்தார். அதனால், சவுல் தன்னுடைய மகள் மீகாளை அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தார்.+
13 அதற்கு தாவீது, “நல்லது! நான் உங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். ஆனால், நீங்கள் எனக்காக ஒன்றைச் செய்ய வேண்டும். நீங்கள் வரும்போது சவுலின் மகள் மீகாளைக்+ கூட்டிக்கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், என்னைப் பார்க்க வராதீர்கள்” என்று சொன்னார்.
20 தாவீது தன்னுடைய வீட்டில் இருப்பவர்களை ஆசீர்வதிக்க வந்தபோது, சவுலின் மகளான மீகாள்+ அவரைப் பார்க்க வெளியே வந்தாள். அப்போது அவரிடம், “இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய ஊழியர்களின் பணிப்பெண்கள் முன்னால் இன்றைக்கு பைத்தியக்காரன் மாதிரி அரைகுறை ஆடையோடு ஆடியது ரொம்பவே பிரமாதம்!”+ என்று சொன்னாள்.