-
1 நாளாகமம் 11:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 பின்பு, தாவீதும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எருசலேம் நகரத்தை, அதாவது எபூசு நகரத்தை,+ கைப்பற்றுவதற்காகப் போனார்கள். அந்தச் சமயத்தில் எபூசியர்கள்+ அங்கே குடியிருந்தார்கள். 5 அவர்கள் தாவீதிடம், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!”+ என்று சொல்லி கேலி செய்தார்கள். ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார்;+ அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது. 6 “எபூசியர்களை யார் முதலில் வெட்டி வீழ்த்துகிறாரோ அவரைப் படைத் தளபதியாக ஆக்குவேன்” என்று தாவீது சொல்லியிருந்தார். செருயாவின் மகன் யோவாப்+ முதலில் சென்று வெட்டி வீழ்த்தியதால், அவர் படைத் தளபதியாக ஆனார்.
-