-
2 சாமுவேல் 12:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அதன் பின்பு, நாத்தான் தன்னுடைய வீட்டுக்குப் போனார்.
உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண் குழந்தையை யெகோவா தாக்கினார்; அது நோய்வாய்ப்பட்டது.
-
-
2 சாமுவேல் 12:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 ஊழியர்கள் கிசுகிசுவென்று பேசிக்கொள்வதைப் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதென்று தாவீது புரிந்துகொண்டார். “குழந்தை இறந்துவிட்டதா?” என்று கேட்டார்; அதற்கு அவர்கள், “ஆமாம்” என்று சொன்னார்கள்.
-
-
2 சாமுவேல் 13:10-15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “ரொட்டியைப் படுக்கையறைக்குக் கொண்டுவா, நான் உன் கையால் சாப்பிட ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான். அதனால், தாமார் தான் சுட்ட ரொட்டிகளை எடுத்துக்கொண்டு அம்னோனின் படுக்கையறைக்குப் போனாள். 11 ரொட்டிகளைப் பக்கத்தில் கொண்டுபோனபோது அவன் அவளைப் பிடித்திழுத்து, “என் தங்கையே வா, என்னோடு வந்து படு” என்று சொன்னான். 12 அதற்கு அவள், “வேண்டாம் அண்ணா! என்னைச் சீரழித்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட காரியத்தை இஸ்ரவேலில் யாரும் செய்ய மாட்டார்கள்.+ இந்தக் கேவலமான காரியத்தைச் செய்யாதீர்கள்.+ 13 காலம் முழுவதும் இந்த அவமானத்தோடு நான் எப்படி வாழ்வேன்? இஸ்ரவேலில் உள்ள கேவலமான ஆட்களில் ஒருவராக உங்களையும் நினைத்துவிடுவார்களே. தயவுசெய்து ராஜாவிடம் பேசுங்கள். அவர் கண்டிப்பாக என்னை உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொன்னாள். 14 ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பலவந்தமாகப் பிடித்து அவளைக் கெடுத்தான். 15 அதன் பின்பு, அவளை ரொம்பவே வெறுக்க ஆரம்பித்தான்; அவள்மீது எந்தளவுக்கு ஆசை வைத்திருந்தானோ அதைவிட அதிகமாக வெறுக்க ஆரம்பித்தான். அவளிடம், “எழுந்து, வெளியே போ” என்று சொன்னான்.
-
-
2 சாமுவேல் 15:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 உடனே தாவீது எருசலேமில் தன்னுடன் இருந்த ஊழியர்கள் எல்லாரிடமும், “எழுந்திருங்கள், இங்கிருந்து ஓடிவிடலாம்.+ இல்லாவிட்டால் அப்சலோமிடமிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது! உடனே கிளம்புங்கள், அவன் சீக்கிரமாக நம்மைத் துரத்திப் பிடித்துக் கொன்றுவிடுவான். நகரத்தில் இருக்கிறவர்களை வெட்டிச் சாய்த்துவிடுவான்!”+ என்று சொன்னார்.
-