-
2 நாளாகமம் 5:8-10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மேல் கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி இருந்தன; அதனால், அவற்றின் நிழல் அந்தப் பெட்டியின் மீதும் அதன் கம்புகளின்+ மீதும் விழுந்தது. 9 அந்தக் கம்புகள் நீளமாக இருந்ததால், மகா பரிசுத்த அறைக்கு முன்னால் இருந்த பரிசுத்த அறையிலிருந்து அவற்றின் முனைகளைப் பார்க்க முடிந்தது, ஆனால் வெளியிலிருந்து அவற்றைப் பார்க்க முடியாது. இந்நாள்வரை அவை அங்கேதான் இருக்கின்றன. 10 மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை.+ எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம்+ செய்த சமயத்தில்+ இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன.
-