-
1 ராஜாக்கள் 12:28-30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார். 30 மக்கள் பாவக்குழியில் விழுவதற்கு இது காரணமானது.+ தாணில் இருந்த கன்றுக்குட்டியை வழிபட மக்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்தார்கள்.
-
-
1 ராஜாக்கள் 13:33, 34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 இதெல்லாம் நடந்த பிறகும் யெரொபெயாம் தன்னுடைய கெட்ட வழியைவிட்டு விலகவில்லை. லேவியராக இல்லாதவர்களை ஆராதனை மேடுகளில் குருமார்களாக நியமித்து வந்தார்.+ குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் ஆராதனை மேட்டில் குருவாக இருக்கட்டும்”+ என்று சொல்லி நியமித்துவிடுவார். 34 யெரொபெயாமின் வீட்டார் செய்த இந்தப் பாவம்தான்+ அவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழியக் காரணமானது.+
-