-
1 நாளாகமம் 5:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அதனால், ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அசீரிய ராஜாவாகிய பூல் (அதாவது, அசீரிய ராஜாவாகிய தில்காத்-பில்நேசர்)+ சிறைபிடித்துக்கொண்டு போனான்; இஸ்ரவேலின் கடவுள்தான் அவன் மனதில் இந்த எண்ணத்தை ஏற்படுத்தினார்;+ சிறைபிடித்த மக்களை ஆலா, ஆபோர், ஆரா ஆகிய இடங்களுக்கும் கோசான் ஆற்றுப்பகுதிக்கும்+ அவன் கொண்டுபோனான். இன்றுவரை அவர்கள் அங்கேதான் குடியிருக்கிறார்கள்.
-
-
2 நாளாகமம் 28:19, 20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 யூதா மக்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வதற்கு இஸ்ரவேலின் ராஜாவான ஆகாஸ் காரணமாக இருந்தார், அவர்கள் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட உண்மையாக இருக்கவில்லை. அதனால்தான், யூதா மக்களுக்கு இப்பேர்ப்பட்ட அவமானத்தை யெகோவா ஏற்படுத்தினார்.
20 அசீரிய ராஜாவான தில்காத்-பில்நேசர்+ ஆகாசுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவரையே எதிர்த்து வந்து அவருக்குக் கஷ்டம் கொடுத்தான்.+
-