30 யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகளே, உங்களுக்கு ஐயோ கேடு!+
நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.
எனக்குப் பிடிக்காததைத் திட்டம் போட்டுச் செய்கிறீர்கள்.+
நான் சொல்லாமலேயே மற்ற தேசங்களோடு கூட்டுச் சேர்கிறீர்கள்.
2 என்னிடம் கேட்காமலேயே+ எகிப்துக்குப் போகிறீர்கள்.+
பார்வோன் உங்களைக் காப்பாற்றுவான் என்று நினைக்கிறீர்கள்.
எகிப்து உங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று நம்புகிறீர்கள்.