5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+
29 ‘என் பெயர் தாங்கிய இடம்’+ என்று இந்த ஆலயத்தைப் பற்றிச் சொன்னீர்களே. அதனால், இந்த இடத்தை நோக்கி உங்களுடைய ஊழியன் செய்கிற ஜெபத்தைக் கேட்பதற்காக இரவும் பகலும் உங்களுடைய கண்கள் இந்த ஆலயத்தின் மேல் இருக்கட்டும்.+
3 அப்போது யெகோவா, “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன், கருணை காட்டச் சொல்லி வேண்டியதையும் கேட்டேன். நீ கட்டிய இந்த ஆலயத்தைப் புனிதப்படுத்தினேன்; என்றென்றும் என்னுடைய பெயர் இங்கே நிலைத்திருக்கும்.+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+