-
யோசுவா 21:27-33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 லேவியின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களுக்கு+ மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருடைய பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய பாசானிலுள்ள கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெயேஸ்திராவும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், இரண்டு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
28 இசக்கார் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கிஷியோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபராத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 29 யர்மூத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், என்-கன்னீமும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
30 ஆசேர் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: மிஷயாலும் அதன் மேய்ச்சல் நிலங்களும், அப்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 31 எல்காத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், ரேகோபும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
32 நப்தலி கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய+ கலிலேயாவிலுள்ள கேதேசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அம்மோத்-தோரும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கர்தானும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், மூன்று நகரங்கள் கொடுக்கப்பட்டன.
33 கெர்சோனியர்களின் குடும்பங்களுக்கு 13 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
-