-
1 ராஜாக்கள் 9:20, 21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 மற்ற தேசத்து மக்களான எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 21 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார், தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+
-
-
2 நாளாகமம் 2:17, 18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 பின்பு, மற்ற தேசத்தைச் சேர்ந்த ஆண்கள் எத்தனை பேர் இஸ்ரவேலில் இருக்கிறார்கள் என்பதை சாலொமோன் கணக்கெடுத்தார்.+ இதற்கு முன்பு அவருடைய அப்பா தாவீது கணக்கெடுத்திருந்தார்.+ அவர்கள் மொத்தம் 1,53,600 பேர் இருந்தார்கள். 18 அவர்களில் 70,000 பேரைச் சுமை சுமக்கவும், 80,000 பேரை மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்கவும் நியமித்தார்.+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+
-