34 அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+
11 யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான். 12 சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலேயே செத்துப்போவான். இனி இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டான்.’+