8 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் நெகுஸ்தாள்; அவள் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகள். 9 யோயாக்கீன் தன்னுடைய அப்பாவைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.