-
1 நாளாகமம் 26:26, 27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகள் எல்லாவற்றுக்கும் செலெமோத்தும் அவருடைய சகோதரர்களும் அதிகாரிகளாக இருந்தார்கள். தாவீது ராஜா,+ தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்,+ ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள், படைப்பிரிவுத் தலைவர்கள் ஆகியோர் இந்தப் பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.+ 27 போர்களில்+ கைப்பற்றப்பட்ட பொருள்களின்+ ஒரு பகுதியை யெகோவாவின் வீட்டைப் பராமரிப்பதற்காக அர்ப்பணித்திருந்தார்கள்.
-
-
2 நாளாகமம் 5:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் செய்து முடித்தார்.+ பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த* பொருள்களை ஆலயத்துக்குக் கொண்டுவந்தார்.+ தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+
-