-
லேவியராகமம் 1:3, 4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 மாடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த அவன் விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளை மாட்டைச் செலுத்த வேண்டும்.+ அதைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து மனப்பூர்வமாகச்+ செலுத்த வேண்டும். 4 தகன பலியாகச் செலுத்தப்படும் காளையின் தலையில் அவன் தன்னுடைய கையை வைக்க வேண்டும். அது அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
-