-
எஸ்றா 9:3, 4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 இதைக் கேட்டதும் நான் என் உடையை* கிழித்து, என் தலையிலிருந்தும் தாடியிலிருந்தும் முடியைப் பிடுங்கி, அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். 4 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய வார்த்தைகளுக்குப் பயந்த எல்லாரும், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய பாவங்களின் காரணமாக என்னிடம் கூடிவந்தார்கள். ஆனால், நான் சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும்வரை அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
-
-
தானியேல் 9:3-5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன். 4 என் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்து, என் ஜனங்களுடைய பாவங்களை ஒத்துக்கொண்டேன். அந்த ஜெபத்தில்,
“உண்மைக் கடவுளாகிய யெகோவாவே, அதிசயமும் அற்புதமுமானவரே, உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுபவரே,+ ஒப்பந்தத்தைக் காப்பவரே,+ 5 நாங்கள் பாவங்களும் குற்றங்களும் செய்தோம். உங்கள் பேச்சை மீறி அக்கிரமம் பண்ணினோம்,+ உங்களுடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விட்டு விலகினோம்.
-