-
எஸ்தர் 3:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பின்பு அகாஸ்வேரு ராஜாவிடம் ஆமான், “உங்களுடைய சாம்ராஜ்யத்தில் உள்ள+ எல்லா மாகாணங்களிலும் ஒரு இனத்தார் பரவியிருக்கிறார்கள்.+ அவர்களுடைய சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதே இல்லை. அவர்களை இப்படியே விட்டுவைப்பது ராஜாவுக்கு நல்லதல்ல.
-
-
எஸ்தர் 7:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 நானும் என் ஜனங்களும் கொலை செய்யப்படுவதற்காகவும் அடியோடு அழிக்கப்படுவதற்காகவும் விற்கப்பட்டிருக்கிறோம்.+ நாங்கள் வெறுமனே அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட, நான் பேசாமல் இருந்திருப்பேன். ஆனால், ராஜாவுக்கே நஷ்டம் ஏற்படப்போவதால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடுவது நியாயமாக இருக்காது” என்று சொன்னாள்.
5 உடனே அகாஸ்வேரு ராஜா, “இப்படியொரு அக்கிரமத்தைச் செய்யத் துணிந்தவன் யார்? அவன் எங்கே?” என்று கேட்டார். 6 அதற்கு எஸ்தர், “இதோ, இந்தக் கேடுகெட்ட ஆமான்தான் அந்த எதிரி!” என்று சொன்னாள்.
ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் வெலவெலத்துப் போனான்.
-