-
அப்போஸ்தலர் 1:16-20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 “சகோதரர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைப்+ பற்றிக் கடவுளுடைய சக்தி தாவீதின் மூலம் முன்னதாகவே சொன்ன வசனம் நிறைவேற வேண்டியிருந்தது.+ 17 அவன் எங்களில் ஒருவனாக இருந்தான்,+ எங்களோடு சேர்ந்து இந்த ஊழியத்தைச் செய்துவந்தான். 18 ஆனால், அவன் செய்த அநீதிக்குக் கிடைத்த கூலியை+ வைத்து ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு தலைகுப்புற விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போனது.+ 19 இந்த விஷயம் எருசலேமில் குடியிருந்த எல்லாருக்கும் தெரியவந்தது. அதனால், அந்த நிலத்துக்கு அவர்களுடைய மொழியில் அக்கெல்தமா என்று பெயர் வைத்தார்கள். இதற்கு “இரத்த நிலம்” என்று அர்த்தம். 20 சங்கீத புத்தகத்தில், ‘அவனுடைய வீடு வெறிச்சோடிப் போகட்டும், அது ஆளில்லாமல் கிடக்கட்டும்’+ என்றும், ‘அவனுடைய கண்காணிக்கும் பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+
-