-
யோபு 38:25-27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 மேலே உள்ள தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கால்வாய் வெட்டியது யார்?
மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியது யார்?+
26 மனுஷ நடமாட்டமே இல்லாத இடத்தில் மழையைக் கொட்டுவது யார்?
ஜனங்கள் வாழாத வனாந்தரத்தில் அதைப் பெய்ய வைப்பது யார்?+
27 மழைநீரால் பொட்டல் காடுகளைப் பசுமையாக்குவது யார்?
புல்பூண்டுகளை முளைக்கச் செய்வது யார்?+
-