-
யோபு 38:8-11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது,
அதற்கு அணை போட்டது யார்?+
9 நான் மேகங்களால் அதைப் போர்த்தினேன்.
கருமேகங்களால் அதை மூடினேன்.
10 அதற்கு ஒரு எல்லைக்கோடு கிழித்தேன்.
கதவுகளும் தாழ்ப்பாள்களும் வைத்தேன்.+
11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.
இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?
-
-
நீதிமொழிகள் 8:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அவர் கடலுக்கு எல்லை வகுத்து,
அதைத் தாண்டக் கூடாது என்று அதன் தண்ணீருக்கு உத்தரவு போட்டபோதும்,+
பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோதும்,
-
எரேமியா 5:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.
‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா?
நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?
நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்?
கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.
அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+
-
-
-