7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+ 8 அவனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுங்கள்.+ கடனாக அவனுக்கு என்ன தேவைப்பட்டாலும் சரி, அதையெல்லாம் தயங்காமல் கொடுங்கள்.