-
நியாயாதிபதிகள் 13:22, 23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 உடனே தன்னுடைய மனைவியிடம், “நாம் கடவுளையே பார்த்துவிட்டோம், அதனால் கண்டிப்பாகச் சாகப்போகிறோம்”+ என்று சொன்னார். 23 ஆனால் அவருடைய மனைவி, “யெகோவா நம்மைக் கொல்ல நினைத்திருந்தால், நாம் செலுத்திய தகன பலியையும் உணவுக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.+ இதையெல்லாம் நமக்குக் காட்டியிருக்க மாட்டார், சொல்லியிருக்கவும் மாட்டார்” என்றாள்.
-
-
1 சாமுவேல் 25:30, 31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 எஜமானே, யெகோவா உங்களுக்குத் தந்த அருமையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உங்களை இஸ்ரவேலின் தலைவராக நியமிக்கும்போது,+ 31 காரணமில்லாமல் இரத்தம் சிந்தியதற்காகவும் பழிவாங்கியதற்காகவும்+ நீங்கள் வருத்தப்படவோ வேதனைப்படவோ வேண்டியிருக்காது. எஜமானே, யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, இந்த அடிமைப் பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
-
-
எஸ்தர் 5:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 ராஜாவுக்கு என்மேல் பிரியம் இருந்தால், என் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால், நாளைக்கு நான் ஏற்பாடு செய்திருக்கிற விருந்துக்கும் ஆமானோடு ராஜா வர வேண்டும். அப்போது, எனக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று ராஜாவிடம் சொல்கிறேன்” என்றாள்.
-
-
தீத்து 2:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதேபோல், வயதான பெண்கள் பயபக்தியோடு நடக்கிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசாதவர்களாக, திராட்சமதுவுக்கு அடிமையாகாதவர்களாக, நல்லதைக் கற்றுக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
-