6அதற்கு யெகோவா மோசேயிடம், “பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்.+ என்னுடைய கைபலத்தை நான் அவனுக்குக் காட்டுவேன், அப்போது இஸ்ரவேலர்களை அவன் அனுப்பிவிடுவான். என்னுடைய கைபலத்தைப் பார்த்து, இந்தத் தேசத்திலிருந்தே அவர்களைத் துரத்திவிடுவான்”+ என்றார்.
6 அதனால் நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் யெகோவா. எகிப்தியர்கள் உங்கள்மேல் சுமத்திய சுமைகளை நான் நீக்குவேன். அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பேன்.+ எகிப்தியர்களைக் கடுமையாகத் தண்டித்து, என்னுடைய மகா வல்லமையால் உங்களைக் காப்பாற்றுவேன்.+