-
ஏசாயா 32:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.
அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.
ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+
-
புலம்பல் 2:8, 9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 சீயோன் மகளுடைய மதிலை இடித்துப்போட+ யெகோவா தீர்மானம் செய்துவிட்டார்.
அளவுநூலை எடுத்து அளந்துவிட்டார்.+
அழிவைக் கொண்டுவர அவர் தயங்கவில்லை.
அரணையும் மதிலையும் அழுது புலம்ப வைத்தார்.
அவற்றின் பலமெல்லாம் போய்விட்டது.
ט [டேத்]
9 அவளுடைய வாசல் கதவுகள் மண்ணில் புதைந்துவிட்டன.+
அவளுடைய தாழ்ப்பாள்களை அவர் உடைத்தெறிந்தார்.
அவளுடைய ராஜாக்களும் அதிகாரிகளும் வேறு தேசத்து ஜனங்களோடு இருக்கிறார்கள்.+
சட்டத்தை* யாரும் கடைப்பிடிப்பது இல்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக்கூட யெகோவாவிடமிருந்து எந்தத் தரிசனமும் கிடைப்பதில்லை.+
-
-
-