-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-
-
ஏசாயா 8:14, 15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவர் புகலிடமாக இருப்பார்.
ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்
அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,
மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+
எருசலேம் குடிமக்களுக்கு
ஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார்.
15 அவர்களில் நிறைய பேர் தடுக்கி விழுந்து படுகாயம் அடைவார்கள்.
கண்ணியில் சிக்கிப் பிடிபடுவார்கள்.
-