-
யோசுவா 10:8-14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அப்போது யெகோவா யோசுவாவிடம், “நான் அவர்களை உன் கையில் கொடுத்துவிட்டேன்,+ அவர்களுக்குப் பயப்படாதே.+ அவர்களில் ஒருவன்கூட உன்னை எதிர்த்து நிற்க முடியாது”+ என்று சொன்னார். 9 யோசுவா ராத்திரி முழுக்க கில்காலிலிருந்து அணிவகுத்து வந்து, அவர்களைத் திடீரென்று தாக்கினார். 10 இஸ்ரவேலர்களுக்கு முன்னால் எதிரிகள் குழம்பிப்போகும்படி யெகோவா செய்தார்.+ அதனால், இஸ்ரவேலர்கள் அவர்களை கிபியோனில் கணக்குவழக்கில்லாமல் கொன்று குவித்தார்கள். பெத்-ஓரோனுக்கு ஏறிப்போகும் பாதையில் அவர்களை விரட்டிக்கொண்டு போனார்கள். அசெக்கா வரையும் மக்கெதா வரையும் போய் அவர்களை வெட்டிப்போட்டார்கள். 11 இஸ்ரவேலர்களின் கையிலிருந்து தப்பித்து, பெத்-ஓரோனிலிருந்து இறங்குகிற பாதையில் ஓடிக்கொண்டிருந்த எதிரிகள்மேல் வானத்திலிருந்து பெரிய ஆலங்கட்டிகளை* யெகோவா விழ வைத்தார். அசெக்காவரை அந்த ஆலங்கட்டிகள் அவர்கள்மேல் விழுந்து அவர்களைக் கொன்றுபோட்டன. சொல்லப்போனால், இஸ்ரவேலர்களின் வாளுக்குப் பலியானவர்களைவிட ஆலங்கட்டி மழைக்குப் பலியானவர்கள்தான் அதிகம்.
12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,
“சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+
சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”
என்று சொன்னார்.
13 அதனால், இஸ்ரவேல் தேசத்தார் எதிரிகளைப் பழிவாங்கித் தீர்க்கும்வரை சூரியன் அசையாமல் நின்றது, சந்திரனும் நகரவில்லை. இது யாசேரின் புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒருநாள் முழுக்க சூரியன் நடுவானத்தில் அசையாமல் நின்றது, அது மறையவே இல்லை. 14 யெகோவா ஒரு மனிதனுடைய வேண்டுதலைக் கேட்டு+ இப்பேர்ப்பட்ட அற்புதத்தைச் செய்த அந்த நாளைப் போல ஒரு நாள் அதற்கு முன்பும் இருந்ததில்லை, அதற்குப் பின்பும் இருந்ததில்லை. யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்தார்.+
-
-
1 நாளாகமம் 14:10-16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அப்போது தாவீது கடவுளிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். 11 அதனால் தாவீது பாகால்-பிராசீமுக்குப்+ போய், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் உண்மைக் கடவுள் என் எதிரிகளை அழித்துப்போட்டார், என் மூலம் இதைச் செய்தார்” என்று சொன்னார். அதனால், அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்* என்று பெயர் வைத்தார்கள். 12 பெலிஸ்தியர்கள் தங்களுடைய சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அவற்றை எரித்துப்போடச் சொல்லி தாவீது கட்டளையிட்டார், அதன்படியே வீரர்கள் அவற்றை எரித்துப்போட்டார்கள்.+
13 பின்பு, பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள்மீது பெலிஸ்தியர்கள் மறுபடியும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள்.+ 14 தாவீது மறுபடியும் உண்மைக் கடவுளிடம் விசாரித்தார்; அதற்கு அவர், “நீ அவர்களை நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்.+ பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய். 15 படைகள் அணிவகுத்து வருகிற சத்தம் பேக்கா புதர்ச்செடிகளுக்கு மேலே கேட்கும்போது உடனே தாக்கு. ஏனென்றால், பெலிஸ்தியர்களின் படையைத் தாக்குவதற்கு உண்மைக் கடவுள் உனக்கு முன்னால் போயிருப்பார்”+ என்று சொன்னார். 16 உண்மைக் கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார்.+ பெலிஸ்திய வீரர்களை கிபியோன்முதல் கேசேர்வரை+ தாவீதின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.
-