-
எரேமியா 36:22-24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 அது ஒன்பதாம் மாதம்.* ராஜா குளிர் கால மாளிகையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். குளிர்காய்வதற்கான நெருப்பு அவர் முன்னால் எரிந்துகொண்டிருந்தது. 23 யெகுதி அந்தச் சுருளிலிருந்து மூன்று, நான்கு பத்திகளை வாசித்ததும் ராஜா அந்தப் பகுதியை செயலாளரின் கத்தியால் வெட்டி நெருப்பில் தூக்கி வீசினார். யெகுதி வாசிக்க வாசிக்க ராஜா இப்படியே அந்தச் சுருளை வெட்டிப் போட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் மொத்த சுருளும் எரிந்துபோனது. 24 சுருளிலிருந்த வார்த்தைகளைக் கேட்டு ராஜாவோ அவருடைய ஊழியர்களோ தங்கள் உடையைக் கிழிக்கவில்லை. யாரும் பயப்படவே இல்லை.
-