-
2 ராஜாக்கள் 24:15, 16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 16 அதோடு, 7,000 போர்வீரர்களையும், 1,000 கைத்தொழிலாளிகளையும் கொல்லர்களையும்* சிறைபிடித்துக்கொண்டு போனான்; போர்ப் பயிற்சி பெற்ற அந்த மாவீரர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
-
-
எரேமியா 24:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன.
-