11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், அருவருப்பான சிலைகளாலும் அருவருப்பான பழக்கவழக்கங்களாலும் நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதால்+ நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன். உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கொஞ்சம்கூட கரிசனை காட்ட மாட்டேன்.+