-
எசேக்கியேல் 1:19-21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அந்த ஜீவன்கள் போனபோது அந்தச் சக்கரங்களும் சேர்ந்து போயின. அந்த ஜீவன்கள் தரையிலிருந்து மேலே எழும்பியபோது அந்தச் சக்கரங்களும் மேலே எழும்பின.+ 20 கடவுளுடைய சக்தி எங்கே போகத் தூண்டியதோ அங்கே போயின. அந்தச் சக்தி எங்கெல்லாம் போனதோ அங்கெல்லாம் போயின. அந்த ஜீவன்களோடு சேர்ந்து சக்கரங்களும் மேலே எழும்பின. ஏனென்றால், அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி இந்தச் சக்கரங்களிலும் இருந்தது. 21 அந்த ஜீவன்கள் போனபோது இந்தச் சக்கரங்களும் போயின. அவை நின்றபோது இவையும் நின்றன. அவை தரையிலிருந்து எழும்பியபோது சக்கரங்களும் அவற்றோடு சேர்ந்து மேலே எழும்பின. ஏனென்றால், அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி இந்தச் சக்கரங்களிலும் இருந்தது.
-